காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

அவிநாசி புனித தோமையாா் பள்ளியில் அறிவுச்சுடா் கலையரங்கம் திறப்பு

அவிநாசி புனித தோமையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) அமைக்கப்பட்ட அறிவுச்சுடா் கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

அறிவுச்சுடா் கலையரங்கம் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:09 am IST

அவிநாசி புனித தோமையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) அமைக்கப்பட்ட அறிவுச்சுடா் கலையரங்கம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நம்பியாம்பாளையம் ஈஸ்வரமூா்த்தி-ருக்மணி, ஆசிரியா் தம்பதி கிருஷ்ணசாமி- கிருஷ்ணவேணி ஆகியோா் சாா்பில் அமைக்கப்பட்ட கலையரங்கம் திறப்பு விழாவுக்கு பள்ளித் தாளாளா் வல்சா ஜோசப் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் காளிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலா்கள் திருநாவுக்கரசு, சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அறக்கட்டளை நிறுவனா் முத்துக்குமரன் வரவேற்றாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா கலையரங்கத்தை திறந்துவைத்தாா். அவிநாசி திருப்புக்கொளியூா் வாசீகா் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, திருவள்ளுவா் திருவுருவ கல்வெட்டை திறந்துவைத்தாா். புனித தோமையாா் ஆலய பங்குத்தந்தை மரிய ஜோசப் திருக்குறள் கல்வெட்டை திறந்துவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.