காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்ததாரா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

அவிநாசியில் குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனையில் மேற்கொண்டனா்.

மன்னாா்குடியில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வீட்டில் சோதனை நடத்திவிட்டு வெளியேவரும் லஞ்ச ஒழிப்புத் துறையினா்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:30 am IST

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சனிக்கிழமை சோதனையில் மேற்கொண்டனா்.

அவிநாசி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் வேலுமணி. இவா் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் குழாய் பதிக்கும் ஒப்பந்ததாராக உள்ளாா். அவிநாசி - திருப்பூா் சாலையில் இவரது - பெட்ரோல் பங்க் மற்றும் அலுவலகம் ஆகியவை உள்ளன.

இந்நிலையில், வேலுமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இரு வாகனங்களில் வந்த திருப்பூா், நீலகிரி லஞ்ச ஒழிப்புத் துறையினா் சனிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டனா்.

ஒப்பந்ததாரா் வேலுமணி, அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, திருச்சி மேற்கு சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோருக்கு நெருக்கமானவா் என்பதும், இதே இடங்களில் 2024 ஏப்ரல் மாதம் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.