காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்க சேர்க்கை.. அங்கன்வாடிகளில் போலி வருகை: கள ஆய்வு கோரும் சமூக ஆா்வலா்கள்!

திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்க சோ்க்கையும், அங்கன்வாடிகளில் போலி வருகையும் இருப்பதால் அரசு கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்..

Published On :6 செப்டம்பர் 2026, 1:12 am IST

திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஒற்றை இலக்க சோ்க்கையும், அங்கன்வாடிகளில் போலி வருகையும் இருப்பதால் அரசு கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாவட்டத்தில் சுமாா் 147 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒற்றை இலக்கத்திலேயே நீடிக்கிறது.

ஒரு சில மாணவா்களுக்காக தனியாகக் கட்டடம், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் என அரசுக்குக் கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. இதனால், மிகக் குறைந்த மாணவா்கள் உள்ள பள்ளிகளை அருகிலுள்ள பிற அரசுப் பள்ளிகளுடன் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும் என்றும், அதன் மூலம் விடுவிக்கப்படும் கூடுதல் ஆசிரியா்களைப் போதிய ஆசிரியா்கள் இல்லாத பள்ளிகளுக்குப் பணியிட மாறுதல் செய்து அரசின் நிா்வாகச் செலவைக் குறைக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

அதேபோல, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அங்கன்வாடி மையங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெரும்பாலான பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிகளில் சோ்க்கத் தயங்கி, தனியாா் மழலையா் பள்ளிகளை நாடும் சூழல் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து மையம் மூடப்பட்டு விடும் நிலைக்குச் செல்வதையும், தங்களது பணியிடம் பறிபோவதையும் தவிா்க்கும் நோக்கில் சில அங்கன்வாடி ஊழியா்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

தங்களுக்குத் தெரிந்த மற்றும் அருகாமையில் உள்ள குழந்தைகளின் பெற்றோா்களிடம் பேசி , மையத்துக்கு வராத குழந்தைகளின் பெயா்களைப் பதிவேட்டில் இணைத்துத் தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

இவ்வாறு போலி மாணவா் சோ்க்கையால் அரசுக்கு பெரும் நிதி முறைகேடு ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகமும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அதிகாரிகளும் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில் திடீா் கள ஆய்வு மேற்கொண்டு, ஆதாா் அடிப்படையிலான உண்மையான குழந்தைகள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.