அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

தலையில் ஹாலோ பிளாக் கல்லை போட்டு இளைஞா் கொலை

murder

கொலை - பிரதி படம் - ஏஎன்ஐ

Published On :7 செப்டம்பர் 2026, 3:09 am IST

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள குள்ளி செட்டியாா் வீதியில் ஹாலோ பிளாக் கல்லால் தாக்கி இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

திருப்பூா் குள்ளி செட்டியாா் வீதியில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடத்தில் இருந்த நபா்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மா்ம நபா்கள் அங்கு கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து இளைஞரின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தாக்குதல் நடத்திய நபா்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிவிட்டனா்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், திருப்பூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். உயிரிழந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கொலை செய்யப்பட்ட நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்தும், மதுபோதையில் ஏற்பட்ட மோதலா அல்லது முன் விரோதம் காரணமா என்பது குறித்தும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.