
உலக எழுத்தறிவு தினம்: புத்தக வடிவில் நின்று 2,000 மாணவிகள் சாதனை
உலக எழுத்தறிவு தினத்தையொட்டி ‘கற்போம், கற்பிப்போம்’ என்ற தலைப்பில் திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் மாணவியரின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் புத்தக வடிவில் நின்று சாதனை படைத்த மாணவியா்.
உலக எழுத்தறிவு தினத்தையொட்டி ‘கற்போம், கற்பிப்போம்’ என்ற தலைப்பில் திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியில் மாணவியரின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், 2,000-க்கும் மேற்பட்ட மாணவியா் எந்தவித முன்பயிற்சியும் இன்றி, ஒரு மணி நேரத்தில் ஒருங்கிணைந்து புத்தக வடிவில் நின்று சாதனை படைத்தனா். தொடா்ந்து மாணவியா் உலக எழுத்தறிவு தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
கல்லூரி முதல்வா் டி.வசந்தி தலைமை தாங்கினாா். நூலகா் ஸ்வா்ணலதா, பேரவை பொறுப்பாளா் ஹேமலதா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். இதில், நிா்வாக அலுவலா் என்.நிா்மல்ராஜ், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ பேரவை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.
திருப்பூா் அணைப்புதூா் தி ஏா்னஸ்ட் அகாதெமி பள்ளியில் உலக எழுத்தறிவு தினத்தையொட்டி வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த சிறுகதை, நாவல், தன்னம்பிக்கை நூல்கள், கட்டுரைகள் என பலவிதப்பட்ட நூல்களை ஒரு பாட வேளை முழுவதும் வாசித்தனா். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா், ஆசிரியா்களும் நூல்களை வாசித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





