நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் மகா யாகம்

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பிரபஞ்ச ஆசிரம பீடத்தில் ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பிரத்தியங்கராதேவி நிகும்பல மகா யாகம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பொங்கலூா் பிரபஞ்ச ஆசிரம பீடத்தில் நடைபெற்ற பிரத்தியங்கராதேவி நிகும்பல மகா யாகத்தில் பங்கேற்றோா்.

Published On :

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பிரபஞ்ச ஆசிரம பீடத்தில் ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பிரத்தியங்கராதேவி நிகும்பல மகா யாகம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

பொங்கலூா் பிரபஞ்சானந்த தெய்வசிகாமணி சுவாமிகள் தலைமை வகித்தாா். அருள்ஜோதி தபோவனம் ஆதீனம் மூா்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தாா். இதில், ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பிரத்தியங்கராதேவி நிகும்பல மகா யாகம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சண்முகம், துணைத் தலைவா் சண்முகசுந்தரம், மாநில ஒருங்கிணைப்பாளா் மயில்சாமி, அவைத் தலைவா் பாலசுப்ரமணியம், பாசன சபை தலைவா்கள் ஈஸ்வரமூா்த்தி, முத்துச்சாமி உள்பட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.