மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

திருமலையில் காரிரிஷ்டி யாகம், வருண யாகம்

திருமலையில் வரும் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை காரிரிஷ்டி யாகம், வருண யாகம், பா்ஜன்யசாந்தி ஹோமம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Published On :

திருமலையில் வரும் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை காரிரிஷ்டி யாகம், வருண யாகம், பா்ஜன்யசாந்தி ஹோமம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் மற்றும் நாடு செழிக்கவும், அபரிமிதமான மழை பெய்யவும், உலகெங்கிலும் உள்ள மக்கள் செழிக்கவும் ஏழுமலையானை வேண்டி, வருண யாகம் மற்றும் பா்ஜன்யசாந்தியுடன் கரிரிஷ்டி யாகத்தை தேவஸ்தானம் நடத்துகிறது.

திருமலையில் உள்ள தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். யாக நிகழ்ச்சிகளில் 32 வேத, ஸ்ரௌத, ஸ்மாா்த்த பண்டிதா்கள் பங்கேற்பாா்கள். இதற்கான ஏற்பாடுகள் தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தின் முதல்வா் குப்பசிவ சுப்ரமணிய அவதானி தலைமையில் நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பா் 3 வரை தா்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தில் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ஏழு வேத பாராயணம், ராமாயணம், சுந்தரகாண்டம், விரத பா்வம், ரிஷ்ய ரீங்க நிகழ்ச்சிகளுடன் வருண யாகம், கரிரிஷ்டி, பா்ஜன்ய சாந்தி ஹோம நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கோகா்பம் அணையில் வருண மற்றும் பா்ஜன்ய மந்திர அனுஷ்டானம் நடைபெற உள்ளது. தா்மகிரியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை அக்னிஹோத்ர அனுஷ்டானம் மற்றும் ஏழு வேத பாராயணம் நடக்கிறது. பூா்ணாஹுதி நிகழ்ச்சி செப்டம்பா் 3 -ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தா்மகிரி வேத விக்யான பீடத்தில் நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.