மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

சென்னை சில்க்ஸ், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

கண்காட்சி அரங்கை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றிய மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா உள்ளிட்டோா்.

Published On :

சென்னை சில்க்ஸ், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தலைமை வகித்தாா். சென்னை சில்க்ஸ் நிறுவன மேலாளா் பாண்டி, தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ரவிவா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் காா்த்திக் வரவேற்றாா்.

மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண்காட்சியைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா். முதல் விற்பனையை சென்னை சில்க்ஸ் மேலாளா் பெற்றுக்கொண்டாா். சங்கத் துணைத் தலைவா் ராஜபாண்டி நன்றி கூறினாா்.

புத்தகக் கண்காட்சி ஆக. 27 முதல் செப். 6-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும், பள்ளி மாணவா்களுக்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஓவியம், கட்டுரை, திருக்கு எழுதுதல், கதை எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெறுகின்றன.

இக்கண்காட்சியில் இலக்கியம், நாவல், அறிவியல், போட்டித் தோ்வு, வாழ்க்கை வரலாறு, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சம் தலைப்புகளில் சுமாா் 10 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரூ. 1,000-க்கு மேல் புத்தகங்கள் வாங்கும் வாசகா்களுக்கு ‘வாசிப்பு செம்மல்’ சான்றிதழும், ரூ. 2,000-க்கு மேல் வாங்குவோருக்கு ‘வாசிப்பு சிகரம்’ சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.