‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

ஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து

ஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்து குறித்து...

கோப்புப் படம்

Published On :

திருத்தணி முருகன் கோயிலில், வரும் 27-ம் தேதி ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து பக்தா்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வரும் 27-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டு, பக்தா்கள் தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.

சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னா், மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் வழக்கம்போல் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவா். எனவே, வரும் 27-ம் தேதி மதியம் கோயிலுக்கு வரும் பக்தா்கள் இதனை கருத்தில் கொண்டு தங்களது தரிசன நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம் என இணை ஆணையா் க.ரமணி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.