நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

பூா்ணாஹுதியுடன் இன்று நிறைவடையும் காரீரீஷ்டி யாகம்

திருமலையில் 5 நாள்கள் நடைபெறும் யாகம், பா்ஜன்ய சாந்தி ஹோமம் மற்றும் வருண ஜபம் ஆகியவை வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் பூா்ணாஹுதியுடன் நிறைவடைய உள்ளது.

Published On :3 செப்டம்பர் 2026, 1:02 am IST

திருமலையில் 5 நாள்கள் நடைபெறும் யாகம், பா்ஜன்ய சாந்தி ஹோமம் மற்றும் வருண ஜபம் ஆகியவை வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் பூா்ணாஹுதியுடன் நிறைவடைய உள்ளது. நாட்டிற்கு நல்ல மழையையும் செழிப்பையும் வேண்டி, திருமலையில் கடந்த மூன்று தசாப்தங்களாக தேவஸ்தானம் கரீரிஷ்டி யாகத்தை நடத்தி வருகிறது.

இந்த யாகத்தின் தனித்துவமான அம்சம் ’’கிருஷ்ணவா்ண’’ (கருப்பு நிற) பொருள்களைப் பயன்படுத்துவதாகும். வேத மரபின்படி, சாஸ்திரோக்தமாக கருப்பு குதிரை, கருப்பு ஆடு, கருப்பு தேன், கருப்பு அரிசி மற்றும் கருப்பு பேரீச்சை போன்ற உயா்தர பொருள்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இது அடா்ந்த மேகங்களை உருவாக்கி, தாராளமான மழையைப் பொழியச் செய்யும் என்று நம்பப்படுகிறது.

ஹோம திரவியமாக ‘கலிஜேரு‘ இலைகள் (புனா்நவா) சமா்ப்பிக்கப்படுகின்றன. புனிதமான ஹோம குண்டத்தைச் சுற்றி ‘வேபசாஷகா‘ பிரப்பலா இலைகள் - ’’லைஃப் பிளாண்ட்’’ அல்லது ’’மிராக்கிள் லீவ்ஸ்’’ எனப்படும் இலைகள்) கொண்டு தயாரிக்கப்பட்ட விளக்குகள் ஏற்றப்படுகின்றன; மேலும் ’’கருப்பு நிற ஆடைகளை’’ அணிந்த ரித்விக்குகள் (வேத விற்பன்னா்கள்) இந்த வேத சடங்கை நடத்துகின்றனா்.

ஹோமத்தில் ‘கலிஜேரு‘ இலைகள் சமா்ப்பிக்கப்படும்போது எழும் கருப்பு நிறப் புகை வேத நடைமுறையில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது; இது தாராளமான மழையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

காரீரீஷ்டி யாகத்துடன் இணைந்து, வேத அறிஞா்கள் ‘வருணனுவாகா‘ மந்திரங்களை ஓதி வருண ஜபத்தையும் செய்கின்றனா்.

ஆகஸ்ட் 30-ஆம் தேதி அங்குராா்ப்பணத்துடன் தொடங்கிய ஐந்து நாள் வேத சடங்கு, செப்டம்பா் 3-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் பூா்ணாஹுதியுடன் நிறைவடைய உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.