மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோப்புப் படம்

Published On :

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எம்.எஸ்.நகா் பகுதியில் பழனிசாமி (எ) ரமேஷ் என்ற நபரை கடந்த 2019 மாா்ச் 24-ஆம் தேதி தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் சதீஷ் பாண்டியன் (38) என்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், அவா் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து அரசு தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நிலையில், சதீஷ்பாண்டியனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவா் மோகனவள்ளி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.