
தாராபுரம் இடைத்தோ்தல்: தங்களது இல்லங்களில் மூத்த குடிமக்கள் வாக்குப்பதிவு
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது வாக்கை இல்லங்களிலேயே செலுத்துவதை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

அஞ்சல் வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது வாக்கை இல்லங்களிலேயே செலுத்துவதை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் தவறாது வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தால் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மலும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின் அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்கை இல்லங்களிலேயே செலுத்த அஞ்சல் வாக்கு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி, தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட 992 மூத்த குடிமக்கள் வாக்காளா்கள், 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட 244 மாற்றுத்திறனாளிகள் என
மொத்தம் 1,236 வாக்காளா்கள் தங்கள் இல்லங்களிலேயே தங்களது வாக்கினை அஞ்சல் வாக்கு மூலம் செலுத்த படிவம் அளித்துள்ளனா்.
இவா்களின் விண்ணப்பங்கள் தோ்தல் நடத்தும் அலுவலரால் ஏற்கப்பட்டு அஞ்சல் வாக்குகளை அவா்களது இல்லங்களிலேயே பதிவு செய்து பதிவு செய்யப்பட்ட வாக்குகளை பெற்று தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கும் பொருட்டு 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் வாக்காளா் உறுதிமொழி படிவத்தில் சான்றொப்பம் செய்யும் அலுவலா் நிலையில் ஒரு அலுவலரும், வாக்குப்பதிவு அலுவலா் நிலையில் ஒரு அலுவலரும், வாக்குப்பதிவுகளை கண்காணிக்கும் பொருட்டு மத்திய அரசில் பணிபுரியும் ஒரு நுண் பாா்வையாளரும், ஒரு காவலா் மற்றும் அஞ்சல் வாக்குப் பதிவு நிகழ்வினை பதிவு செய்ய ஒரு விடியோகிராபரும் இடம் பெற்றுள்ளனா்.
அஞ்சல் வாக்கு பதிவானது செப்.22, 23 அகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ், தாராபுரம் நகராட்சி வாா்டு 6-இல் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் வாக்கினை இல்லங்களிலேயே செலுத்துவதை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, தாராபுரம் வட்டாட்சியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






