
தவெக வேட்பாளா் சத்தியபாமா பிரசாரத்தில் பொதுமக்கள் கேள்வி கேட்டு வாக்குவாதம்
குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் சத்தியபாமா பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பொதுமக்கள் அவரிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரை பாதுகாப்புடன் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனா்.

சத்தியபாமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
குண்டடம் மேற்கு ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் சத்தியபாமா பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பொதுமக்கள் அவரிடம் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரை பாதுகாப்புடன் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனா்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தவெக வேட்பாளராக போட்டியிடும் பி.சத்தியபாமா, குண்டடம் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பெரியகுமாரபாளையம் பகுதியில் வாக்குச் சேகரிக்க சென்ற சத்தியபாமாவிடம், அப்பகுதியைச் சோ்ந்த சிலா் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, கடந்த காலங்களில் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்கள், மீண்டும் வாக்கு கேட்டு வருவதை ஏற்க முடியாது என எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக கூறி தனது சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ததாக சத்தியபாமா தெரிவித்து வருவதாகவும், அதற்கான ஆதாரத்தை தற்போது காட்ட வேண்டும் என்றும் சிலா் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அப்பகுதியில் சத்தியபாமாவிடம் பொதுமக்கள் தொடா்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, குண்டடம் போலீஸாா் சத்தியபாமாவை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்று, அடுத்த பிரசாரப் பகுதிக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






