
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒடுக்கும் தவெக ஆட்சி: கனிமொழி கண்டனம்
மதுரையில் நீதி கேட்டு போராடிய குடும்பத்தினரை தவெக ஆட்சி ஒடுக்குவதாக கனிமொழி தெரிவித்தது குறித்து...

போராட்டக் களத்தில்... - படம் - எக்ஸ்
மதுரையில் நீதி கேட்டு போராடிய குடும்பத்தினரை தவெக ஆட்சி ஒடுக்குவதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி திங்கள்கிழமை (செப். 14) தெரிவித்தார்.
மதுரை ஆனையூரைச் சோ்ந்த மாணவர் தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், கூடல்புதூர் பகுதியில் உள்ள ஓர் கண்மாயில் அவர் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தையடுத்து, சடலம் மீட்கப்பட்டது.
இதுதொடா்பாக கூடல்புதூர் காவல்துறையினர் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, மாணவர் தமிழ்ச்செல்வன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவிய நிலையில், மாணவரின் உறவினர்கள் நீதி கேட்டு போராடினர்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.
உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.
மாணவன௠தமிழà¯à®à¯à®à¯à®²à¯à®µà®©à®¿à®©à¯ மரணதà¯à®¤à®¿à®±à¯à®à¯ நà¯à®¤à®¿ à®à¯à®à¯à®à¯ பà¯à®°à®¾à®à¯à®®à¯ à®à®µà®°à®¤à¯ à®à®±à®µà®¿à®©à®°à¯à®à®³à¯ மறà¯à®±à¯à®®à¯ பà¯à®¤à¯à®®à®à¯à®à®³à¯ à®®à¯à®¤à¯ à®à®¾à®µà®²à¯à®¤à¯à®±à¯à®¯à¯ à®à®µà®¿ à®à®à®à¯à®à¯à®®à¯à®±à¯à®¯à¯à®à¯ à®à®à¯à®à®µà®¿à®´à¯à®¤à¯à®¤à¯ விà®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯ தவà¯à® à®à®°à®à¯.
— Kanimozhi (à®à®©à®¿à®®à¯à®´à®¿) (@KanimozhiDMK) September 14, 2026
à®à®à®±à¯à®à¯à®±à¯ à®à®¯à¯à®µà®¿à®²à¯ à®à®®à¯à®®à®¾à®£à®µà®©à¯ தாà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯ à®à¯à®²à¯ à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®à®¤à®±à¯à®à®¾à®© தà®à®¯à®à¯à®à®³à¯ à®à®°à¯à®ªà¯à®ªà®¤à®¾à®à®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà®à¯à®®à¯ நிலà¯à®¯à®¿à®²à¯,⦠pic.twitter.com/bEMKM8aWPw
Summary
DMK Lok Sabha MP Kanimozhi stated on Monday (Sept. 14) that the TVK government is suppressing the families who were protesting for justice in Madurai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





