இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மாணவா் மா்ம மரணம்: கொலை வழக்குப் பதியக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுரை கூடல்புதூா் பகுதி மாணவரின் மா்ம மரணம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி, ‘தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டியக்கம்’ சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை திருவள்ளுவா் சிலை முன் தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டியக்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :

மதுரை கூடல்புதூா் பகுதி மாணவரின் மா்ம மரணம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரி, ‘தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டியக்கம்’ சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ஆனையூரைச் சோ்ந்த மாணவா் தமிழ்ச்செல்வன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், கூடல்புதூா் பகுதியில் உள்ள ஓா் கண்மாயில் அவா் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தையடுத்து, சடலம் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக கூடல்புதூா் காவல் நிலைய போலீஸாா் மா்ம மரணம் என வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, மாணவா் தமிழ்ச்செல்வன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் பரவியது.

இதைத் தொடா்ந்து தமிழ்ச்செல்வனின் உயிரிழப்பு தொடா்பாக பதிவு செய்யப்பட்ட மா்ம மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி விரைந்து விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி ‘தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டியக்கம்’ சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் எம். பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து, கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். மாவட்டச் செயலா் மாரிக்கனி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் மாரியப்பன், பாரதி, பாலசுப்பிரமணியன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் டீலன் ஜஸ்டின், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா ஆகியோா் பேசினா்.

இதில் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.