புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தூத்துக்குடி தேரிக்காடுகள் பகுதிகளில் தாதுமணல் எடுக்கும் கொடிய திட்டம்! கனிமொழி எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேரிக்காடுகளை அழிக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என கனிமொழி வலியுறுத்தல்...

DMK MP Kanimozhi

திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Published On :

தூத்துக்குடி மாவட்டத்தில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தேரிக்காடுகள் உள்ள பகுதிகளில் தாதுமணல், அரிய மண் தனிமங்களை எடுக்கும் திட்டங்களை தவெக அரசு கைவிட வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் குதிரைமொழி, சாத்தான்குளம் தேரிக்காடுகள் உள்ள நிலையில், அங்கு தாது மணல் எடுக்கும் திட்டத்த்தைக் கொண்டுவர தவெக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தேரிக்காடுகளை வனவிலங்கு சரணாலயமாகவும், சூழலியல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்கும் முயற்சியும் மறுபுறம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுபற்றி திமுக எம்.பி. கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில்,

"பலவகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகவும், செம்மண் குன்றுகள் நிறைந்த புவியியல் முக்கியத்துவம் மிக்க பகுதியாகவும் இருப்பவை குதிரைமொழி மற்றும் சாத்தான்குளம் தேரிக்காடுகள்.

இத்தகைய தேரிக்காடுகளை வனவிலங்கு சரணாலயமாகவும், சூழலியல் உணர்திறன் மண்டலமாகவும் அறிவிக்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அதே நிலப்பரப்பில் தாதுமணல் மற்றும் அரிய மண் தனிமங்களை எடுப்பதற்கான கொடிய திட்டங்களையும் தவெக அரசின் கனிமவளத்துறை முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாட்டின் அரிய வகை நிலப்பரப்பாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான சூழலியல் பகுதிகளாகவும் விளங்கும் இந்தத் தேரிக்காடுகளை அழிக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

TVK government must abandon the plan to destroy the Teri forests: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.