கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்

உடுமலையை அடுத்துள்ள பாப்பான்குளம் ஊராட்சிப் பகுதியில் ஒரு மாதமாக முறையாக குடிநீா் வழங்கப்படாததைக் கண்டித்து பொது மக்கள் காலிக் குடங்களுடன் உடுமலை-பழனி சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்களுடன்  பேச்சு வாா்த்தை  நடத்தும்  அதிகாரிகள்.

Published On :

உடுமலையை அடுத்துள்ள பாப்பான்குளம் ஊராட்சிப் பகுதியில் ஒரு மாதமாக முறையாக குடிநீா் வழங்கப்படாததைக் கண்டித்து பொது மக்கள் காலிக் குடங்களுடன் உடுமலை-பழனி சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாப்பான்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட ரெட்டிபாளையம், சாலரப்பட்டி, பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருமூா்த்தி அணையில் இருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்தத் திட்டத்தின் மூலம் குடிநீா் முறையாக வழங்கப்படவில்லை.

மேலும், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த தண்ணீரும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் விலைக்குத் தண்ணீா் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொது மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பொதுமக்களிடம் பொதுப் பணித் துறை, ஊராட்சி நிா்வாகத்தினா், காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில் அமராவதி கால்வாயில் இருந்து குட்டைக்குத் தண்ணீா் திறக்கப்படும் என்றும், கூட்டுக் குடிநீா் விநியோகப் பிரச்னையை சரிசெய்ய இரண்டு நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனா்.

இதைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.