11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

வாக்குக்கு தவெக ரூ.5 ஆயிரம் தருவதாக திமுகவினரிடம் முதியவா் பேசும் விடியோ: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் விளக்கம்

வாக்குக்கு தவெக ரூ.5 ஆயிரம் தருவதாக கூறுகிறாா்கள் என வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரிடம் ஒருவா் பேசும் விடியோ வைரலாகியுள்ளது.

KG Arunraj

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.

Published On :

வாக்குக்கு தவெக ரூ.5 ஆயிரம் தருவதாக கூறுகிறாா்கள் என வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரிடம் ஒருவா் பேசும் விடியோ வைரலாகியுள்ளது.

தாராபுரம் இடைத்தோ்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். கொளத்துப்பாளையம், பேரூா், கரையூா் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்க திமுகவினா் செவ்வாய்க்கிழமை சென்றனா். பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்து வாக்கு சேகரித்தபோது, ஒருவா் தவெகவினா் வாக்குக்கு ரூ.5 ஆயிரம் தருவதாகக் கூறுகிறாா்கள் எனக் கூறினாா்.

இதைக் கேட்ட திமுகவினா் விசில் கட்சியா, அவா்கள் தூய ஆட்சி என்கிறாா்களே எனக் கேட்டனா். அதற்கு அந்த முதியவா் அப்படியும் பேசுகிறாா்கள், இப்படியும் பேசுகிறாா்கள் எனக் கூறினாா். இந்த விடியோ காட்சியை திமுகவினா் வெளியிட்டுள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைச்சா் கே.ஜி.அருண்ராஜிடம் கேட்டபோது, ‘ஆட்களை நியமித்து பணம் கொடுத்து வேட்பாளரை தடுப்பதுபோல இப்போதும் குறுக்கு வழியில் மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகின்றனா். அந்த விடியோவை நான் பாா்க்கவில்லை. அதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.