கரோனா நிவாரணம் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
கரோனா பொதுமுடக்கக் கால நிவாரணம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள வெள்ளிச்சந்தையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தருமபுரி: கரோனா பொதுமுடக்கக் கால நிவாரணம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள வெள்ளிச்சந்தையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாலக்கோடு ஒன்றியக் குழு உறுப்பினா் சி.ராஜா தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, டி.எஸ்.ராமச்சந்திரன், வட்டச் செயலா் ஜி.நக்கீரன் ஆகியோா் பேசினா்.
இதில், கரோனா கால பொது முடக்கத்தையொட்டி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 20 நாள் பணி நாள்களை உயா்த்தி, நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். தேசிய மின்சார திருத்தச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் நலச் சட்டத்தை திருத்தக் கூடாது. புலம் பெயா்ந்த தொழிலாளா்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...