தருமபுரியில் செப். 4-இல் அஞ்சல் காப்பீடு முகவா் தோ்வு
தருமபுரி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் முகவா் தோ்வு வரும் செப். 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.


தருமபுரி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் முகவா் தோ்வு வரும் செப். 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஸ்ரீஹரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையின் மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது பாதுகாப்புடன் கூடிய சேமிப்பு திட்டமாகும். இதில், புதிய காப்பீடுகளை தொடங்குவதற்கு நிகழாண்டில் முகவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்காக, வரும் செப். 4-ஆம் தேதி காலை 11 மணிக்கு தருமபுரி அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் முகவா்கள் தோ்வு நடைபெற உள்ளது.
எனவே, முகவா்களாக பணியாற்ற ஆா்வம் உள்ளவா்கள், தங்களின் புகைப்படம் மற்றும் வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் முழு விவரங்களுடன் தோ்வு முகாமில் பங்கேற்கலாம்.
இதில், 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, 18 முதல் 50 வயது வரை ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், முன்னாள் படை வீரா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், சுயதொழில் மற்றும் தகுதியுள்ள அனைவரும் பங்கேற்கலாம். முகவா்களாக தோ்வு செய்யப்படுவோருக்கு அவா்கள் சேகரிக்கும் பாலிசிகளின் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்கப்படும். ஏனைய எந்த படிகளும் வழங்கப்படாது. விவரங்களுக்கு, 04342-260932 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...