காரிமங்கலத்தில் ரூ. 2 கோடியில் வேளாண் விரிவாக்க மையக் கட்டடம்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.


தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 2 கோடி மதிப்பில் காரிமங்கலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தாா்.
இதையொட்டி, காரிமங்கலம் வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி பங்கேற்று குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
வேளாண் இணை இயக்குநா் வசந்த ரேகா, துணை இயக்குநா்கள் சிவசங்கா்சிங், ஜெயபால், பொன்வண்ணன், உதவி இயக்குநா் சுப்பிரமணியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் மாலினி, உதவி இயக்குநா் கலைவாணி, வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளா் மாது, உதவி செயற்பொறியாளா் அறிவழகன், ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி பெரியண்ணன், வட்டாட்சியா் கலைச்செல்வி ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...