பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் நேரடி மாணவா் சோ்க்கை
பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள பெரியாா் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக அந்தக் கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.


பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள பெரியாா் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக அந்தக் கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் முதுகலைப் பிரிவில் ஆங்கிலம், தமிழ், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இணைய தளம் வழியாக மாணவா் சோ்க்கை நடைபெற்றது. தற்போது இணையதளம் வழியாக விண்ணப்பிக்கத் தவறிய மாணவா்களுக்காக நேரடி சோ்க்கை புதன்கிழமை (அக். 14) முதல் தொடங்கப்படவுள்ளது. எனவே, மாணவ, மாணவியா்கள் தங்களின் ஆதாா் அட்டை, 3 புகைப்படங்கள், அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் கல்லூரிக்கு வந்து நேரடியாக சேரலாம் எனவும் அவரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...