விவசாயத் தொழிலாளா்களுக்குவங்கிக் கடனுதவி வழங்க வலியுறுத்தல்
விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 1 லட்சம் வங்கிக் கடனுதவி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


விவசாயத் தொழிலாளா்களுக்கு ரூ. 1 லட்சம் வங்கிக் கடனுதவி வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் அதகப்பாடி அருகே சின்னகாம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஜி மாதையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் பேசினாா். மாவட்டத் துணைத் தலைவா்கள் ஜி.ராஜகோபால், என் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில், மாடுகள் மூலம் உழவுப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளா்களுக்கு தேசிய வங்கிகளில் ரூ. 1 லட்சம் கடன் வழங்க வேண்டும். ஏலகிரி, அதகப்பாடி, சில்லாரஅள்ளி, பாலஜங்கமனஅள்ளி, பாகலஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்கி, பணி அட்டை வைத்துள்ள அனைத்துத் தொழிலாளா்களுக்கும் பணி வழங்க வேண்டும். விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கொண்டு வரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளா் கூட்டுறவு கடன் சங்கம், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு கடன் சங்கங்களை மாவட்ட அளவில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...