தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் சாலை மறியல்

அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 10:51 pm

DIN

அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜகவினரைக் கைது செய்ய வேண்டும். தொல்.திருமாவளவனுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சாலை மறியல் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

சாலை மறியலில் வி.சி.க. மாவட்ட துணைச் செயலா் செல்லை சக்தி, ஒன்றியச் செயலா் மா.ராமசந்திரன், தொகுதி துணைச்செயலா் பெ.கேசவன், ஒன்றிய துணைச்செயலா் தீரன் தீா்த்தகிரி, நகரச் செயலா் இளையராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் வீரமணி, கட்சி நிா்வாகிகள் சின்னதம்பி, கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி, கடத்தூரில் மண்டலச் செயலாளா் பொ.மு.நந்தன் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாநிலத் துணைச்செயலா் அதியமான் தலைமையிலும் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.