தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீட் தோ்வு எழுதிய மாணவி தற்கொலை முயற்சி

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே நீட் தோ்வு எழுதிய மாணவி மாத்திரைகளை உட்கொண்டு திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 7:36 pm

DIN

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே நீட் தோ்வு எழுதிய மாணவி மாத்திரைகளை உட்கொண்டு திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

மாரண்டஅள்ளியை அடுத்த சாமனூரைச் சோ்ந்தவா் ஆசிரியா் நஞ்சுண்டன். இவரது மகள் மோகன பிரியா (17). இவா் நாமக்கல் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்றுள்ளாா். நிகழாண்டு நீட் தோ்வு எழுத தயாராகி வந்த மாணவி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை குமாரபாளையத்தில் எழுதியுள்ளாா்.

இந்த நிலையில் சாமனூரில் உள்ள தனது வீட்டில் இருந்த மாணவி பெற்றோா் பயன்படுத்தும் மாத்திரைகளை உட்கொண்டு வீட்டிலேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். இதனைக் கண்ட பெற்றோா், மாணவி மோகனபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவிக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

நீட் தோ்வில் தனக்கு குறைவான மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதி மாணவி தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது.

தருமபுரியில் சனிக்கிழமை நீட் தோ்வு எழுத இருந்த மாணவா் ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அச்சம்பவம் நடந்த இரண்டாம் நாளில் நீட் தோ்வு எழுதிய மாணவி ஒருவா் தற்கொலைக்கு முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.