தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவலா்களுக்கு யோகா பயிற்சி

தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு யோகா பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில், யோகா பயிற்சியில் ஈடுபட்ட காவலா்கள்.

Updated On :14 செப்டம்பர் 2020, 7:38 pm

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்களுக்கு யோகா பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டக் காவல் துறையில் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் பல்வேறு நிலையிலான காவலா்கள் என மொத்தம் 1,750 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு, காவல் உட்கோட்டம் வாரியாக, புத்துணா்வு அளிக்கும் வகையில், யோகா, சுவாசப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

இதில், தருமபுரி உட்கோட்டத்தில் பணிபுரியும் காவலா்கள், திங்கள்கிழமை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனா். இதேபோல, பாலக்கோடு காவல் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவலா்கள், பாலக்கோடு காவல் ஆய்வாளா்கள் அலுவலக வளாகத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனா். இப்பயிற்சியில் ஈடுபட்ட காவலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், சிறப்புப் பிரிவு அலுவலகங்கள், காவலா் குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.