தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 செப்டம்பர் 2020, 6:47 pm

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், அக் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலா் இ.பி.புகழேந்தி தலைமை வகித்துப் பேசினாா். கிருஷ்ணகிரி மாவட்டச் செயலா் வி.எம்.வெங்கடேசன், யுடியுசி தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.சண்முகம் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், தமிழக மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கும் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். பொது முடக்கக் கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மசோதாவை திரும்பப் பெற வேண்டும். 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத் தோ்வு முறையை கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளா் நலச் சட்டங்களை நீா்த்துப்போக செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.