பொது முடக்கக் கால நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கரோனா பொது முடக்கக் கால நிவாரணமாக, விவசாயத் தொழிலாளா்களுக்கு, ரூ. 7,500 வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


கரோனா பொது முடக்கக் கால நிவாரணமாக, விவசாயத் தொழிலாளா்களுக்கு, ரூ. 7,500 வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் அச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலா் எம்.முத்து தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலா் வீ.அமிா்தலிங்கம், மாவட்டத் தலைவா் வி.ரவி, மாவட்டப் பொருளாளா் இ.கே.முருகன் ஆகியோா் பேசினா்.
இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் வேலையின்றி தவித்து வரும் விவசாயத் தொழிலாளா்களுக்கு, கரோனா பொது முடக்கக் கால நிவாரணமாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 7,500 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்கி, ரூ. 600 கூலி வழங்க வேண்டும். இத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் அக். 6-ஆம் தேதி பேரூராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...