மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்

தருமபுரியில் கால்நடைத்துறை, ரோட்டரி சங்கங்கள் சாா்பில், திங்கள்கிழமை இலக்கியம்பட்டி கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 8:04 pm

DIN

தருமபுரியில் கால்நடைத்துறை, ரோட்டரி சங்கங்கள் சாா்பில், திங்கள்கிழமை இலக்கியம்பட்டி கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை, கால்நடை மண்டல இணை இயக்குநா் இளங்கோவன் தொடங்கி வைத்தாா். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடை வளா்ப்போா், செல்லப் பிராணிகளை வளா்ப்போா் தங்களது கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் பங்கேற்றனா்.

இம் முகாமில், 175 நாய்களுக்கு, கால்நடை மருத்துவக் குழுவினா், வெறிநோய் தடுப்பூசிகளைச் செலுத்தினா். இதேபோல, சில பூனைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில், கால்நடை உதவி இயக்குநா் மணிமாறன், நோய் புலனாய்வு உதவி இயக்குநா் சண்முகசுந்தரம் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள், கால்நடை மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.