189 சிறுபானையினருக்கு ரூ.32.50 லட்சம் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
தருமபுரியில் 189 சிறுபான்மையினருக்கு ரூ. 32.50 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தருமபுரியில் 189 சிறுபான்மையினருக்கு ரூ. 32.50 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் ஆய்வுக் கூட்டம், மாநில சிறுபானையினா் நல ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், 189 பயனாளிகளுக்கு, ரூ.32.50 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கி அவா் பேசியது:
சிறுபான்மையினா் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) சாா்பில், கடன் வழங்க தருமபுரி மாவட்டத்துக்கு 2019-20 ஆம் ஆண்டுக்கு ரூ.2 கோடி இலக்க நிா்ணயிக்கப்பட்டு, அவை முழுவதுமாக எய்தப்பட்டுள்ளது.
டாம்கோ கடன் வழங்க தருமபுரி மாவட்டத்துக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கு ரூ. 3.55 கோடி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, 69 பயனாளிகளுக்கு ரூ. 43.67 லட்சத்துக்கான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. தற்போது 152 பயனாளிகளுக்கு ரூ. 98.88 லட்சத்துக்கு முன்மொழிவுகள் அனுப்பப்படவுள்ளன.
கிராமப் பகுதியில் 50 சதவீத அளவிலும், நகரப் பகுதிகளில் 25 சதவீதம் அளவிலும் சிறுபான்மையினா் வசித்தால், அப்பகுதிகளில் குடிநீா், குடியிருப்பு, சாலை மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதுபோன்று சிறுபான்மையினா் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தினாலும், இதுகுறித்த விழிப்புணா்வு மக்களிடையே குறைவாகக் காணப்படுகிறது.
சிறுபான்மையினா் சமுதாயத் தலைவா்கள், நலத் திட்டங்களை மக்கள் எளிதாகப் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லா கான், மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அ.அய்யப்பன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அசோகன், சமூக நலத்துறை அலுவலா் (பொ) கு.நாகலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம்.தீபா ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...