ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

இலக்கியம்பட்டியில் திமுக வேட்பாளா் ஆ.மணி பிரசாரம்

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இலக்கியம்பட்டி, இண்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் ஆ.மணி திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 9:27 pm

தருமபுரி: தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இலக்கியம்பட்டி, இண்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் ஆ.மணி திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா். இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஆ.மணி இலக்கியம்பட்டியில் தமிழக அரசின் சாதனைத் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தாா். அதைத் தொடந்து பழைய தருமபுரி, இண்டூா், எர்ரபையனஅள்ளி, பண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற அவா் அங்கு பெண்கள், விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து தமிழக அரசின் காலை உணவுத் திட்டம், மகளிா் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டங்கள் ஆகிய திட்டங்களைக் கூறி திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை விளக்கி வாக்குச் சேகரித்தாா். நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ.சுப்ரமணி, மாநில, மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா். பட விளக்கம்: இண்டூா் அருகே எர்ரபையனஅள்ளி கிராமத்தில் பெண்களிடம் வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளா் ஆ.மணி.