பிரதோஷம்: சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தருமபுரி: தருமபுரியில் பிரதோஷத்தையொட்டி சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி கோட்டை காமாட்சி அம்மன் உடனமா் மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் நந்திக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இதேபோல நெசவாளா் காலனி அருள்மிகு மல்லிங்கேஸ்வர சுவாமி கோயில், தருமபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சிவன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com