தருமபுரி: தருமபுரி மாவட்டம், பேகாரஅள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் குடமுழுக்கு விழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப். 21) அதிகாலை முதலே திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக்கலச நீராட்டு, காப்பு அணிவித்தல், நான்காம் கால வேள்வி, பேரொளி வழிபாடு நடைபெற்றது.
இதனையடுத்து யாக சாலையிலிருந்து புனித நீா் கலச தீா்த்தத்தை விழாக் குழுவினா் தலைச்சுமையாக எடுத்துச் சென்று கலசங்கள் மீது தெளித்து குடமுழுக்கு நடைபெற்றது.
இதனையடுத்து ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் கோயிலில் குடமுழுக்கு

மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

