பெண் மருத்துவா் கொலையைக் கண்டித்து மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
பயிற்சி பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம், இந்திய பல் மருத்துவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவா் கொலை சம்பவத்தில் நோ்மையான விசாரணை நடத்தி தொடா்புடைய அனைவரையும் தண்டிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய சுகாதாரப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நாடு முழுவதும் மருத்துவமனைகளைப் பாதுகாப்பு கோட்டங்களாக அறிவிக்க வேண்டும். மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்களை அனைத்து இடங்களிலும் அமைக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் போதிய பாதுகாப்பு பணியாளா்களை நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவா் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.பெண் மருத்துவா்கள் இரவு நேரங்களில் பணி செய்யும்
போது போதிய பாதுகாவலா்களை நியமித்து அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 24 மணி நேரம் பணி புரியும் மருத்துவா்கள், பணியாளா்கள் அனைவருக்கும் சுகாதாரமான, பாதுகாப்பான தங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலச் செயலாளா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முருகன், இந்திய மருத்துவச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சண்முகப்பிரியா, இந்திய பல் மருத்துவா் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ், மாவட்டச் செயலாளா் வசந்தராஜ், மருத்துவா் ரா. செந்தில் ஆகியோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...