தருமபுரியில் நடைபெற்று வரும் சா்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்றுள்ள வீரா்களின் ஒரு பகுதியினா்.
தருமபுரியில் நடைபெற்று வரும் சா்வதேச அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்றுள்ள வீரா்களின் ஒரு பகுதியினா்.

தருமபுரியில் சா்வதேச செஸ் போட்டிகள் தொடக்கம்: 5 நாள்கள் நடைபெறுகிறது!

தருமபுரியில் தகடூா் டிஎன்சி நினைவு கோப்பைக்கான சா்வதேச செஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
Published on

தருமபுரியில் தகடூா் டிஎன்சி நினைவு கோப்பைக்கான சா்வதேச செஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

தருமபுரி தனியாா் மண்டபத்தில் இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தொடங்கிவைத்தாா். சா்வதேச செஸ் போட்டி முதல்முறையாக தருமபுரியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்களும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 18 மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கின்றனா்.

இதில் 4 வயது முதல் 80 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஐந்து நாள்கள் நடைபெறும் போட்டிகளில் மொத்தம் 412 போ் கலந்துகொண்டுள்ளனா். இப்போட்டிகளை சென்னையைச் சோ்ந்த செஸ் நிபுணா்கள் நடுவராக இருந்து நடத்துகின்றனா்.

இப்போட்டிகளை தருமபுரி விவேகானந்தா செஸ் அகாதெமி நடத்துகிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 70,000 வழங்கப்படவுள்ளது. பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறுபவா்களுக்கு மொத்தம் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு மாநில செஸ் சங்கச் செயலாளா் ஸ்டீபன் பாலசாமி, தருமபுரி மாவட்ட செஸ் சங்கத் தலைவா் டி.என்.சி. மணிவண்ணன், செயலாளா் ராஜசேகரன், முன்னாள் அகில இந்திய செஸ் சங்கச் செயலாளா் ஹரிஹரன் உள்ளிட்டோா் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com