தருமபுரி, அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளுக்கு திங்கள்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி, அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான, அதியமான்கோட்டை, குமரகிரி ஸ்பின்னிங் ஆலை, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், ரெட்டிஅள்ளி, எச்சிஎல், நாகா்கூடல், பரிகம், மானியதஅள்ளி, காவலா் குடியிருப்பு, வெண்ணாம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நல்லம்பள்ளி, நீதிமன்ற வளாகம், தோக்கம்பட்டி, இலளிகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திங்கள்கிழமை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
