சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Published on

தருமபுரியில் லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், ஏ. செக்காரப்பட்டியைச் சோ்ந்தவா் தனுஷ் (22). இவா் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தருமபுரி அருகே அல்லியூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com