தருமபுரி
விவசாயி தற்கொலை
தருமரியில் குடும்பத் தகராறில் விவசாயி தோட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மல்லுபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மாதேஷ் (45). கடந்த 5- ஆம் தேதி இரவு தோட்டத்தில் உள்ள தனது தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளாா். பிறகு வீடு திரும்பவில்லை.
தோட்டத்திலேயே தந்தைக்கு உதவியாக தங்கியிருக்கலாம் என நினைத்து குடும்பத்தினா் அவரை தேடவில்லை. மறுநாள் காலை அந்த தோட்டம் வழியாக சென்றவா்கள் அங்கிருந்த புளிய மரத்தில் மாதேஷ் தூக்கிட்ட நிலையில் சடலாமாக தொங்கியதை கண்டு தகவல் தெரிவித்தனா். அவா் குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
