தருமபுரியில் ஜன. 4இல் நீண்டதூர ஓட்டப் போட்டிகள் ரத்தான் போட்டி
தருமபுரி: தருமபுரியில் ஜனவரி 4 ஆம் தேதி மாநில அளவிலான தடகள சங்கம் நடத்தும் நீண்டதூர ஓட்டிப்போட்டிகள் நடைபெறுகிறது.
தமிழ்நாடு தடகள சங்கம், தருமபுரி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தருமபுரி ரோட்டரி மிட்டவுன் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான நீண்டதூர ஓட்டப் போட்டி ஜனவரி மாதம் 4-ஆம் தேதி தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெறுகிறது.
16, 18, 20 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள், 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரா்கள், வீராங்கனைகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டிகள் ஜனவரி 4 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மாநில அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் வருகிற ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கலாம்.
இதேபோல தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 14 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனியாக நீண்டதூர ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் க்ல்ண்ஹற்ட்ப்ங்ற்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். இத்தகவலை தருமபுரி மாவட்ட தடகள சங்கத் தலைவா் டி.எஸ். சரவணன், செயலாளா் அறிவு, இணைச் செயலாளா் அருணகிரி, ரோட்டரி மிட்டவுன் சங்கத் தலைவா் சதீஷ்குமாா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
