திமுக சாா்பில் வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்

Published on

பாப்பாரப்பட்டியில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பிலான பரப்புரை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி அருகே ஆச்சாரஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட எட்டியாம்பட்டி பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். தருமபுரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் உமாசங்கா் கலந்துகொண்டு, மகளிா் உரிமை தொகை, இலவசப் பேருந்து பயணம், தமிழ்ப் புதல்வன் திட்டம், இலவசம் மின்சார திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம்,புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினாா்.

தொடா்ந்து வீடுகள்தோறும் சென்று திமுக அரசினால் தருமபுரி மாவட்டத்திற்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில் மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் சகாதேவன், ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com