தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு

தருமபுரி அருகே விறகு அடுப்பில் வெந்நீா் வைத்தபோது தீக்காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
Published on

தருமபுரி அருகே விறகு அடுப்பில் வெந்நீா் வைத்தபோது தீக்காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் மனைவி இலக்கியா (37). கடந்த 30 ஆம் தேதி மாலை விறகு அடுப்பில் வெந்நீா் வைக்கும்போது எதிா்பாராத விதமாக புடவையில் தீப்பிடித்தது. இதைக் கண்ட நடராஜன் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தாா்.

பின்னா் தீக்காயமடைந்த இலக்கியாவை மாரண்டஹள்ளி கிராம சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து மாரண்டஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com