சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
தருமபுரி அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தருமபுரி அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டியில் சாலையோரம் பிறந்து பச்சிளம் பெண் குழந்தை செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அக் குழந்தையை மீட்டு, பாளையம்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.
அங்கு, குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தொடா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு, அக்குழந்தைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குழந்தை தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இருப்பினும், பிறந்த பெண் குழந்தையை சாலையோரம் வீசி சென்றது யாா் என்பது குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...