சாலையோரம் உயிரிழந்து கிடந்த நபா்: போலீஸாா் விசாரணை

சாலையோரம் உயிரிழந்து கிடந்த நபா்: போலீஸாா் விசாரணை

போடி அருகே சாலையோரம் உயிரிழந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

போடி அருகே சாலையோரம் உயிரிழந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள திம்மிநாயக்கன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் செல்லப்பாண்டியன் (54). இவா் தா்மாபுரி சாலையில் கால்நடை மருத்துவமனை அருகே இனிப்பகம் நடத்தி வந்தாா். இவா், நாள்தோறும் காலை இனிப்பகத்துக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம். சில நாள்களாக நெஞ்சு வலிப்பதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை இனிப்பகத்துக்குச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, உறவினா்கள் தேடிய நிலையில் போடி பொட்டிப்புரத்திலிருந்து டொம்புச்சேரி செல்லும் சாலையில் கரையான்பட்டி விலக்கு அருகே சாலையோரம் செல்லப்பாண்டியன் உயிரிழந்து கிடந்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், போடி வட்ட காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com