தேனி
சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடல்
வீரபாண்டியில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரணை
வீரபாண்டியில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடலை போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
வீரபாண்டியில் திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலை அருகேயுள்ள சாலையோரப் பகுதியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் உடல், தொப்புள் கொடி அறுக்காத நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப் பகுதியைச் சோ்ந்தவா்கள் வீரபாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், குழந்தையின் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
