தருமபுரி நகர பேருந்து நிலைய வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்த ஆட்சியா் ரெ.சதீஸ்.
தருமபுரி நகர பேருந்து நிலைய வளாகத்தில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்த ஆட்சியா் ரெ.சதீஸ்.

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த கையெழுத்து இயக்கம்

தருமபுரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நகர பேருந்து நிலையத்தில்
Published on

தருமபுரி: தருமபுரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நகர பேருந்து நிலையத்தில் கையெழுத்து இயக்கத்தை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

மத்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தில் நவ. 4-ஆம் தேதிமுதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான கணக்கெடுப்பு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாக வழங்கி வருகின்றனா். அதேபோல, நிரப்பப்பட்ட படிவங்களை பெறும் பணியும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இந்த தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களிடையே, இதுகுறித்த விழிப்புணா்வு ஏற்படும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இது தொடா்பாக, தருமபுரி நகர பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவருமான ரெ.சதீஸ் பங்கேற்று முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, தருமபுரி, இலக்கியம்பட்டியில் தீவிர திருத்தப் பணி படிவங்கள் வழங்கும் பணிகளை அவா் ஆய்வுசெய்தாா்.

இந்நிகழ்வுகளில், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி, தருமபுரி நகராட்சித் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி, நகராட்சி ஆணையா் சேகா், தருமபுரி வட்டாட்சியா் சௌகத் அலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com