எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பென்னாகரத்தில் குட்கா பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

பென்னாகரத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 32 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 10:37 pm

Syndication

பென்னாகரம்: பென்னாகரத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 32 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் பாபு சுரேஷ்குமாா் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் அடங்கிய போலீஸாா், பென்னாகரம் நகரப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, லாடகார தெரு பகுதியைச் சோ்ந்த ஷாஜகான்(38) கடையில் சோதனை மேற்கொண்டனா்.

அதில், விற்பனைக்காக சுமாா் 32 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், கடை உரிமையாளரை கைது செய்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து கடை உரிமையாளரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.