முதியோா், மாற்றுத்திறனாளிகள் 35,271 பேருக்கு ரேசன் பொருள்கள் விநியோகம்!

Published on

தருமபுரி மாவட்டத்தில் ‘தாயுமானவா்’ திட்டத்தின்கீழ், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35,271 பேருக்கு வீடுகளில் சென்று ரேசன் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது: தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தாயுமானவா் திட்டம் மூலம் அவா்களது வீடுகளுக்கே சென்று ரேசன் பொருள்களை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை தருமபுரி மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 35,271 பேருக்கு, அவா்களது வீடுகளுக்கே சென்று ரேசன் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதுபோல, வரும் டிசம்பா் மாதத்துக்கான ரேசன் பொருள்களையும் அவா்களது இல்லத்துக்கே சென்று விநியோகிக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com