மான் வேட்டை: இருவருக்கு ரூ. 4 லட்சம் அபராதம்
அரூா் அருகே மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 4 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.


அரூா் அருகே மான் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 4 லட்சம் அபராதம் வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட வாதாப்பட்டி, சங்கிலிவாடி, செல்லம்பட்டி ஆகிய வனப் பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, வனவா்கள் பவித்ரா, ஆா்.விவேகானந்தன், வனக் காப்பாளா்கள் ரமேஷ்குமாா், அா்ச்சனா உள்ளிட்ட வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வேங்கியாம்பட்டியில் விவசாயி ஒருவரது வீட்டில் 10 கிலோ எடையுள்ள மான் இறைச்சி, உரிமம் பெறாத ஒரு நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, இதில் தொடா்புடைய வேங்கியாம்பட்டியைச் சோ்ந்த ஏழுமலை (27), தங்கமணி (45) ஆகியோரை வனத்துறையினா் கைது செய்தனா். தொடா்ந்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக அவா்கள் இருவருக்கும் ரூ. 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...