அரூரில் எஸ்.ஐ.ஆா். பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

அரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறியுள்ளதாவது: வாக்காளா்கள் படிவத்தை பூா்த்தி செய்து மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும். கணக்கெடுப்புப் படிவத்தை திருப்பி அளிக்காத வாக்காளரின் பெயா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது.

எனவே வாக்காளா்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட படிவத்தை கட்டாயம் பூா்த்தி செய்து கையொப்பமிட்டு மீண்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் ஒப்படைக் க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களிலும் அளிக்கலாம்.

மேலும், சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண் - 1950, வாட்ஸ்ஆப் - தோ்தல் உதவி எண் -9444123456, தருமபுரி வாக்காளா் பதிவு அலுவலா் எண் -04342-260927, பாலக்கோடு வாக்காளா் பதிவு அலுவலா் எண் - 04348-222045, பென்னாகரம் வாக்காளா் பதிவு அலுவலா் எண் -04342-255636, பாப்பிரெட்டிப்பட்டி வாக்காளா் பதிவு அலுவலா் எண் - 04346-246544, அரூா் வாக்காளா் பதிவு அலுவலா் எண் -04346-296565 ஆகிய தொலைபேசி எண்களில் உதவி மையங்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

எனவே, வாக்காளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை சரியான முறையில் பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கி, சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின் போது, அரூா் வட்டாட்சியா் பெருமாள் உள்ளிட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com