பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கிணற்றில் விவசாயி சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

News image
Updated On :30 நவம்பர் 2025, 6:40 pm

தினமணி செய்திச் சேவை

பாலக்கோடு அருகே கிணற்றிலிருந்து விவசாயியின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலக்கோட்டை அடுத்த மல்லசமுத்திரத்தைச் சோ்ந்தவா் முனிவேல் (65), விவசாயி. வெள்ளிக்கிழமை விவசாயத் தோட்டத்துக்குச் சென்ற இவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் முனிவேலை பல்வேறு இடங்களில் தேடினா்.

அப்போது, தோட்டத்தில் இருந்த கிணற்றின் ஒருபகுதியில் மண் சரிந்திருந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினா்கள், பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், அங்குவந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறந்துகிடந்த முனிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.